» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது : கர்நாடகா திட்டவட்டம்

வியாழன் 4, ஏப்ரல் 2024 4:56:24 PM (IST)

கர்நாடகாவில் குடிநீர் பிரச்சினை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவை வைத்துள்ள 3.5 டி.எம்.சி. நீரையும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான நீரையும் தடை இன்றி திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு கர்நாடகாவில் குடிநீர் பிரச்சினை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் நீர் இருப்பு மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்றும் கர்நாடகா தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory