» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் இல்லம் அருகே 144 தடை உத்தரவு: ஆம் ஆத்மி கட்சி முற்றுகை எதிரொலி!

செவ்வாய் 26, மார்ச் 2024 11:48:39 AM (IST)



பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ள நிலையில் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.  வரை மாா்ச் 28-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆம் ஆத்மி கட்சி சமூக வலைதளத்தில், ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் காப்போம் என்பதை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆம் ஆத்மி கட்சியினர் இன்று(மார்ச். 26) புதுடெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் இல்லம் அருகேவுள்ள படேல் சௌக் மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

படேல் செளக் மெட்ரோ ரயில் நிலையம் வந்த பஞ்சாப் அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஹர்ஜோத் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும், 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக அனைத்து ஆம் ஆத்மி தொண்டர்களும் கலைந்து செல்லும்படி எச்சரிக்கை காவல்துறை தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory