» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு : கர்நாடக முதல்வர் அறிவிப்பு!

வெள்ளி 16, பிப்ரவரி 2024 3:37:17 PM (IST)



காவிரி ஆற்றின் குறுக்கே விரைவில் மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வரும், நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், "மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ளது. முறையான அனுமதி பெற்று விரைவில் அணை கட்டும் பணி தொடங்கப்படும்.

மேக்கேதாட்டு அணை கட்ட உருவாக்கப்பட்ட சிறப்பு குழுக்களின் கீழ் 2 துணைக் குழுக்கள் செயல்படும். அணை கட்டும்போது நீர் செல்லும் நிலப்பரப்புகள், வெட்டப்பட வேண்டிய மரங்கள் ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கண்டனம்!

கடந்த கர்நாடக பட்ஜெட் தொடரிலேயே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மீண்டும் கர்நாடக சட்டப்பேரவையில் மேக்கேதாட்டு அணை விவகாரம் எழுப்பப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory