» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திர மாநில நிர்வாகம் விசாகப்பட்டினத்துக்கு மாற்றம்: ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

புதன் 20, செப்டம்பர் 2023 4:55:07 PM (IST)

ஆந்திர மாநில நிர்வாகம், வருகிற விஜயதசமி அன்று,  அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படுவதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

2014 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலகத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டது. அப்போது ஆந்திரத்தின் தலைநகராக அமராவதியும் தெலங்கானாவின் தலைநகராக ஹைதராபாத்தும் முடிவு செய்யப்பட்டது. ஆந்திரத்தின் தலைநகராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு, ஆந்திரத்துக்கு மூன்று தலைநகரங்கள் வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்.

விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகரமாகவும் அமராவதி சட்டப்பேரவைத் தலைநகராகவும் கர்னூல் நீதிமன்றத் தலைநகரமாகவும் செயல்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். இது  தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் மாநில நிர்வாகத்தை விசாகப்பட்டினத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி கடந்த சில மாதங்களாகவே கூறிவந்த நிலையில், அதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இதன்படி வருகிற விஜயதசமி அன்று முதல் விசாகப்பட்டினத்தில் நிர்வாகச் செயல்பாடுகள் துவங்கும் என்று அறிவித்துள்ளார். 

தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு துறைகளின் கட்டடங்களை தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டு குழுவின் பரிந்துரைகளின்படி, இடமாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.  முதலமைச்சரின் குடியிருப்புகள், முகாம் அலுவலகங்கள் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற டிசம்பரில் முழுமையாக இந்த இடமாற்றம் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory