» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்தது : 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

புதன் 20, செப்டம்பர் 2023 10:13:36 AM (IST)

காஷ்மீரில் 7 நாட்களாக நடந்து வந்த என்கவுண்ட்டர் நிறைவடைந்தது. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ஹடொல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கடந்த வாரம் புதன்கிழமை பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ கர்னல் மன்பிரீத் சிங், ராணுவ மேஜர் ஆஷிஷ், போலீஸ் டிஎஸ்பி ஹிமயன் பட், ராணுவ வீரர் உள்பட 4 பேர் வீரமரணமடைந்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், 7 நாட்களாக நடந்து வந்த என்கவுண்ட்டர் துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்துள்ளது. தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட ஒரு பயங்கரவாதியின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ஒரு பயங்கரவாதி உடலை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory