» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விடைபெற்றது நாடாளுமன்ற பழைய கட்டிடம்: 750 எம்.பி.க்கள் இணைந்து குரூப் போட்டோ!

செவ்வாய் 19, செப்டம்பர் 2023 10:45:51 AM (IST)

பழைய பாராளுமன்ற கட்டடத்திற்கு பிரியா விடை கொடுத்து, இரு அவைகளிலும் உள்ள 750 எம்.பி.,க்களுடன் பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஒன்றாக நின்று 'குரூப் போட்டோ' எடுத்துக் கொண்டனர்.

ஆங்கிலேயர் காலத்து பாராளுமன்ற  கட்டடத்துக்கு விடை கொடுக்கும் வகையில், அதனருகே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, அதிநவீன வசதிகளுடன், புதிய பாராளுமன்ற கட்டடத்தை கட்டி உள்ளது. பழைய பாராளுமன்ற கட்டடத்தில், சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இன்று முதல் வரும் 22 வரை, புதிய பார்லி., கட்டடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடக்க உள்ளது.

பழைய பாராளுமன்ற கட்டடத்திற்கு பிரியா விடை கொடுத்து, புதிய பாராளுமன்ற கட்டடத்திற்குள் நுழைவதை குறிக்கும் வகையில் பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் உள்ளிட்ட இரு அவைகளை சேர்ந்த 750 எம்.பி.,க்கள் ஒன்றாக நின்று 'குரூப் போட்டோ' எடுத்துக்கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory