» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாராளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் தயார்: நிதிஷ் குமார் பேட்டி

செவ்வாய் 19, செப்டம்பர் 2023 10:33:35 AM (IST)

பாராளுமன்ற தேர்தல்  முன்கூட்டியே வந்தால் அதை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறினார்.

இது தாெடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம். எவ்வளவு சீக்கிரம் தேர்தலை நடத்துகிறீர்களோ, அவ்வளவு நல்லது. தேர்தலுக்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம். முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தல் நடந்தால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மக்களுக்காக உழைத்து வருகிறோம், தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வோம். சாலைகள், பாலங்கள், மின்சாரம், குடிநீர் வசதிகளை அமைப்பது முதல் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் வரை மாநிலத்தில் பல பணிகளை செய்துள்ளோம். வாக்காளர்களே இறுதி முடிவை எடுப்பார்கள் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory