» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை ரத்து: ரயில்வேக்கு கூடுதலாக ரூ.1,500 கோடி வருவாய்

புதன் 18, மே 2022 12:06:26 PM (IST)

மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதால், ரயில்வேக்கு கூடுதலாக ரூ.1,500 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 

இதுகுறித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேக கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்து ரயில்வே துறை கூறும்போது, கடந்த 2020 மார்ச் 20 ஆம் தேதி முதல் 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை மூத்த குடிமக்களுக்கான கட்டணச்சலுகை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த காலகட்டத்தில் 7.31 கோடி மூத்த குடிமக்கள் கட்டண சலுகையின்றி பயணம்  செய்துள்ளனர். அதில் 60 வயதிற்கு மேற்பட்ட 4.46 கோடி ஆண்களும், 58 வயதிற்கு மேற்பட்ட 2.84 கோடி பெண்களும் 8,310 திருநங்கைகளும் பயணித்துள்ளனர்.  அவர்கள் மூலம் ரூ.3,464 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கட்டண சலுகை நீக்கப்பட்டதால், கூடுதலாக ரூ.1500 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory