» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கார் விபத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் மரணம்: மகாராஷ்டிராவில் சோகம்!

செவ்வாய் 25, ஜனவரி 2022 11:11:51 AM (IST)

மகாராஷ்டிராவில் கார் விபத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏவின் மகன் உள்பட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் உயிரிழந்தனர். 

மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் ஏற்பட்ட கார் விபத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உயிரிழந்த 7 பேரும் சங்வியில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆவர்.  7 மாணவர்களும் தேர்வு எழுதிவிட்டு, விருந்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் நேற்றிரவு 11.30 மணி அள்வில் வார்தா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, காட்டுப்பன்றி ஒன்று அவர்களின் வாகனத்தில் மோதியதில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory