» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை; நாட்டின் வளர்ச்சியே முக்கியம் - பிரதமர் மோடி உறுதி!

சனி 4, டிசம்பர் 2021 4:11:12 PM (IST)

தமது அரசு வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை. நாட்டின் வளர்ச்சியை மையமாக கொண்டு செயல்படுவதாக பிரதமர் மோடி கூறினார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் மற்றும் நிறைவடைந்த திட்டங்களை  பிரதமர் மோடி, தொடங்கி வைத்தார். விழாவில் 8300 கோடி ரூபாய் செலவில் டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சில அரசியல் கட்சிகள் பொதுமக்களை சுயசார்பற்ற நிலைக்கு தள்ளி உள்ளதாக குற்றம் சாட்டினார்.

தமது அரசு வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை. நாட்டின் வளர்ச்சியை மையமாக கொண்டு செயல்படுவதாகவும் அவர் கூறினார். 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை மத்தியில் ஆட்சி செய்த அரசு 288 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே தேசிய நெஞ்சாலை திட்டத்தை செயல்படுத்தியதாகவும், ஆனால் தமது அரசு கடந்த 7 ஆண்டுகளில்  2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை விரிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.  கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் உத்தரகாண்ட மாநிலம் முன்னிலையில் இருப்பதாகவும், இதற்காக மாநில அரசை தாம் பாராட்டுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory