» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

வியாழன் 2, டிசம்பர் 2021 10:13:50 AM (IST)

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து குளிர்காலக் கூட்டத் தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி திங்கள்கிழமை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் அறிமுகம் செய்தாா். 

வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மீது நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனா். இரு அவைகளும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவிற்கு இன்று அவர் ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் 3 புதிய வேளாண் சட்டங்களும் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்ட நிலையை அடைந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory