» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குளிர்கால கூட்டத்தொடர்: நவம்பர் 28ல் அனைத்துக் கட்சிக் கூட்டம் - பிரதமர் மோடி பங்கேற்பு

திங்கள் 22, நவம்பர் 2021 4:52:33 PM (IST)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நவம்பர் 28-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. 17-வது மக்களவையின் 7-வது கூட்டத்தொடர் இது. இதற்கு முன்பு நவம்பர் 28-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெகாசஸ் விவகாரத்தால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போனது. அடுத்தாண்டு உத்தரப் பிரதேசம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதனிடையே மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த 19-ம் தேதி அறிவித்தார். இவற்றுக்கு மத்தியில் குளிர்கால கூட்டத் தொடர் கூடவுள்ளதால், இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல், பணவீக்கம், இந்திய-சீன எல்லை விவகாரம் உள்ளிட்டவை கூட்டத்தொடரில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory