» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எல்.கே.அத்வானியின் 94வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தலைவர்கள் வாழ்த்து

திங்கள் 8, நவம்பர் 2021 5:08:29 PM (IST)

எல்.கே.அத்வானியின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, மற்றும் பாரதிய ஜனதா தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் துணை பிரதமரும், பாஜகவின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவருமான எல்.கே. அத்வானி இன்று 94வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில், "மரியாதைக்குரிய அத்வானி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்துக்கும் பிரார்த்திக்கிறேன். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், நமது கலாச்சாரப் பெருமையை மேம்படுத்துவதற்காகவும் அவர் மேற்கொண்ட பல முயற்சிகளுக்காக தேசம் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது. அவர் தனது அறிவார்ந்த நோக்கங்களுக்காகவும், வளமான அறிவாற்றலுக்காகவும் பரவலாக மதிக்கப்படுகிறார்" என்று பதிவிட்டிருந்தார்.

"அத்வானி ஒரு நல்ல வழிகாட்டி" என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார். மேலும் "அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட அவரது புலமை, தொலைநோக்கு மற்றும் அறிவுத்திறன் கொண்ட மிகவும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்" என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

"கட்சியை மக்களிடம் கொண்டு சென்று நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் அத்வானி. கோடிக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்தவர். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்" என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory