» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மோடியின் நண்பர்களின் நலனுக்காக பெட்ரோல் டீசல் விலை உயர்வு: ராகுல் விமர்சனம்!

செவ்வாய் 19, அக்டோபர் 2021 10:20:32 AM (IST)

மோடியின் நண்பர்களின் நலனுக்காக நாட்டு மக்கள் ஏமாற்றப்படுவதாக ராகுல் காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் விமானங்களுக்கான எரிபொருளான டர்பைனை விட வாகனங்களுக்கான இந்த எரிபொருள்களின் விலை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதை சுட்டிக்காட்டி மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், மத்திய அரசு மிரட்டி வரி பறிப்பதாகவும், இந்த விவகாரம் ஒரு முக்கிய பிரச்சினை எனவும் குறிப்பிட்டு உள்ளார். மேலும், மோடியின் நண்பர்களின் நலனுக்காக ஏமாற்றப்படும் மக்களுடன் தான் இருப்பதாகவும், தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory