» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் கனமழை : அக்.21 வரை சபரிமலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!

திங்கள் 18, அக்டோபர் 2021 5:12:02 PM (IST)

சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில்  அக்-17ம் தேதி முதல் அக்-21 வரை பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இத்தகைய தரிசனம் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பருவமழை தொடங்கி கேரளாவில் மிக கனமழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை அக்.21 வரை ரத்து செய்வதாக அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory