» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமரின் நிவாரண நிதி நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு: அவசர சட்டம் அமல்

புதன் 1, ஏப்ரல் 2020 10:26:23 AM (IST)

பிரதமரின் நிவாரண நிதி நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு மற்றும் பல்வேறு வரிகளை செலுத்துவோருக்கான காலக்கெடு நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு நிதி சலுகைகள் தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழில் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளன. இந்தியாவில் தற்போது கரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு, வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நிதி சலுகைகள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 24ம் தேதி அறிவித்தார். 

வரிகளை செலுத்துவதற்கான காலக்கெடு 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக கூறிய அவர், கரோனா நிவாரணப் பணிகளுக்கான ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பில் நிதி தொகுப்பையும் அறிவித்தார். இந்த அறிவிப்புகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்தின்படி வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 2018-19-ம் நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் அபராதம் 12 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பிற்கான அவகாசம் மார்ச் 31-ல் இருந்து ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கான ஜி.எஸ்.டி. தாக்கல் செய்வதற்கான அவகாசமும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கன கலால் ரிட்டன்களை தாக்கல் செய்வதற்காக கடைசி தேதியும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு தாமதம் மற்றும் அபராதம் விதிக்கப்படாது. பெரும் நிறுவனங்களுக்கான அபராதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதுவங்கி வாடிக்கையாளர்கள் அடுத்த 3 மாதங்களில் எந்த ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. பிரதமரின் நிவாரண நிதிக்கு (PM CARES FUND) வழங்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி சட்டம் 80ஜி பிரிவின் கீழ் 100 சதவீத வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்த வருமானத்திற்கு விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத வரிச் சலுகை வரம்பு, இந்த நன்கொடைக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory