» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா வைரஸ்: பிரதமர் நிவாரண நிதிக்கு ரயில்வே ஊழியர்கள் ரூ.151 கோடி வழங்கினர்

ஞாயிறு 29, மார்ச் 2020 5:17:45 PM (IST)

ரயில்வே துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான 151 கோடி ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.

கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதக அளவில் பரவி வருகிறது. தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட உள்ளது. இதனால் கரோனா வைரஸை முறியடிக்க தாராளமாக நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார். அதன்படி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் ரயில்வேயில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான ரூ. 151 கோடி ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். மேலும், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி ஆகியோர் தங்களது ஒருமாத சம்பளத்தை வழங்கியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory