» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

சனி 15, பிப்ரவரி 2020 4:20:59 PM (IST)

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவருமான ஷா பைசல் மீது சர்ச்சைக்குரிய பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்த பைசல், மீது நேற்று இரவு பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரிலிருந்து பொதுப் போட்டியில் ஐ.ஏ.எஸ் தேறிய முதல் முஸ்லிம் ஷா பைசல் . எம்பிபிஎஸ் பட்டத்தை தங்க பதக்கத்துடன் பெற்றவர். 

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எந்த வித விசாரணையும் இன்றி யாரையும் ஓராண்டு வரை, சிறையில் அடைக்க முடியும். முன்னதாக கடந்த பிப்ரவரி 6 -ஆம் தேதி, காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சர்களான உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டனர். கடந்த, 2019  ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவு, இஸ்தான்புல் செல்ல விருந்த பைசலை, டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்து ஸ்ரீநகருக்கு திருப்பி அனுப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory