» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது

சனி 16, நவம்பர் 2019 6:58:28 PM (IST)

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக இன்று மாலை 5மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 

சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்து தீபாராதனை நடத்தினார். இதையடுத்து, 18-ஆம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்குப் பின் 18-ம் படிக்கு கீழே காத்திருக்கும் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இன்றைய தினம் பிற பூஜைகள் எதுவும் நடைபெறாது. 

பக்தர்களின் தரிசனத்துக்குப் பிறகு இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோயில் சாவி புதிய மேல்சாந்தி சுதீா் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்படும். மீண்டும் நாளை(நவ.17) அதிகாலை 4.00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு பகல் 1.00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வந்த 10 பெண்களை, பம்பையில் நிறுத்தி திருப்பி அனுப்பியதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். நீண்ட சோதனைக்கு பின்னர், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். பம்பை, நிலக்கல் ஆகிய முக்கிய இடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory