» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

15 வயது வீராங்கனைக்கு பாலியல் தொல்லை : நீச்சல் பயிற்சியாளர் டெல்லியில் கைது

சனி 7, செப்டம்பர் 2019 10:54:04 AM (IST)

15 வயது வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில்  தலைமறைவாக இருந்த நீச்சல் பயிற்சியாளர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

கோவா நீச்சல் சங்க பயிற்சியாளராக இருந்த சுராஜித் கங்குலி தன்னிடம் பயிற்சி பெற்ற 15 வயது வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பு ஆனதை தொடர்ந்து அவர் மீது கோவா போலீசார் கற்பழிப்பு உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். 

இந்நிலையில் தலைமறைவாக இருந்த சுராஜித் கங்குலி டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார். அங்கிருந்து அவர் கோவாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இதற்கிடையே, ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட பயிற்சியாளர் சுராஜித் கங்குலிக்கு இந்திய நீச்சல் சம்மேளனம் நேற்று தடை விதித்தது. தடை குறித்த சுற்றறிக்கையை அனைத்து மாநில நீச்சல் சங்கங்களுக்கும், இந்திய நீச்சல் சம்மேளனம் அனுப்பி இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory