» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விரைவில் ரயில் நிலையங்களில் மண் குவளைகளில் சூடான தேநீர் வினியோகம்: நிதின் கட்கரி

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2019 9:54:37 PM (IST)

விரைவில் ரயில் நிலையங்களில் மண் குவளைகளில் சூடான தேநீர் வினியோகம் செய்யப்படும் என  நிதின் கட்கரி தெரிவித்தார்.

விரைவில் இந்தியா முழுக்க முக்கியமான ரயில் நிலையங்களில் சூடான தேனீர் மண் குவளைகளில் வழங்கப்படும் .மத்திய எம் எஸ் எம் இ அமைச்சர் நிதின் கட்காரி ரயில்வே அமைச்சர் பி.கோயலுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ரயில் நிலையங்களில் சூடான தேனீர் மண் குவளைகளில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார் இந்த தகவலை புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது நிதின் கட்காரி வெளியிட்டார்.

முதலில் 100 முக்கிய ரயில் நிலையங்களில் தேனீர் மண் குவளையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கும் படி கேட்டுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார் விமான நிலையங்கள் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் மண் குவளைகளில் தேநீர் வழங்கலாம் என கட்கரி கூறினார்.இந்த மாற்றத்தால் கிராம பகுதிகளில் உள்ள மண்பானை தயாரிக்கும் தொழில் முனைவோர் பெரிதும் பயன்பெறுவார்கள் அதேநேரத்தில் சுற்றுச்சூழலும் மேம்படுத்தப்படும் என கட்காரி கூறினார் கமிஷனுக்கு தான் வேறு ஒரு உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் கட்கரி கூறினார் பெருமளவில் சுடுமண் குவளைகளை தயாரித்து வழங்க காதி கிராம தொழில் கமிஷன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் .

சென்ற ஆண்டு மண்பானைகளை தயாரிப்பதற்கு உதவும் மின்சார சத்திரங்கள் பத்தாயிரம் மண்பானை கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது இந்த ஆண்டு 25 ஆயிரம் மின்சார சக்கரங்கள் வழங்கப்படும் என காரி கிராமத்தொழில் கமிஷன் தலைவர் வினய் குமார் கூறினார் ரயில் நிலையங்களில் சுட்ட மண் குவளைகளில் தேனீர் வழங்கும் முறையினை 2004 ஆம் ஆண்டு அப்பொழுது ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் துவக்கி வைத்தார் தற்பொழுது வாரணாசி மற்றும் ரேபரேலி ரயில் நிலையங்களில் மட்டும் சுடு மண் குவளைகளில் தேநீர் வழங்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory