» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அருண் ஜேட்லியின் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி: சோனியா காந்தி இரங்கல்

சனி 24, ஆகஸ்ட் 2019 4:58:24 PM (IST)

டெல்லியில் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 66-வயதான அருண் ஜேட்லி, கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த அருண் ஜேட்லி, சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். அருண் ஜேட்லியின் மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அருண் ஜேட்லியின் உடல் டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  அருண் ஜேட்லியின் உடலுக்கு  உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார். மூத்த அமைச்சர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருண் ஜேட்லியின் உடல் கொண்டு செல்லப்பட்டு மதியம் 2 மணி வரை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து நிகம்போத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது.

சோனியா காந்தி இரங்கல் 

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும்,  அருண் ஜேட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சோனியா காந்தி, வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”அருண் ஜேட்லியின் பொதுச்சேவை எப்போதும் நினைவுகூரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory