» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மூளைக் காய்ச்சலால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி: மத்திய, மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

திங்கள் 24, ஜூன் 2019 5:21:04 PM (IST)பீகாரில் மூளை காய்ச்சலால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் திடீரென உயிரிழந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது.  பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகள் முசாபர்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து மத்திய மருத்துவ நிபுணர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். பீகாரில் மூளை காய்ச்சலால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். முசாபர்பூரில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், இவ்விவகாரத்தை முன்வைத்து வழக்கறிஞர்கள் மனோகர் பிரதாப் மற்றும் சன்பிரீத் சிங் அஜ்மனி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கன்னா கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. மூளை காய்ச்சல் நோயில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் தொடர்பாக இன்னும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory