» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திங்கள் 24, ஜூன் 2019 11:32:52 AM (IST)

டெல்லியில் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பெண் நிருபர் மிதாலி சண்டோலா என்பவர் காயம் அடைந்தார்.

டெல்லியில் நிருபராக பணியாற்றி வரும் மிதாலி சண்டோலா என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் தனது காரில் நொய்டாவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். டெல்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் அவரது கார் சென்றபோது ஒரு வாகனம் அவரது காரை முந்திச்சென்று நின்றது.

அந்த வாகனத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் மிதாலியின் கார் மீது முட்டைகளை வீசினார்கள். பின்னர் துப்பாக்கியால் மிதாலியை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் போலீசார் விரைந்துவந்தனர். குண்டு காயம் அடைந்திருந்த மிதாலியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory