» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றபோது பிழைத்த முதியவர்: மருத்துவர்கள் அதிர்ச்சி

சனி 22, ஜூன் 2019 5:26:11 PM (IST)

மத்திய பிரதேசத்தில் பிரேத பரிசோதனைக்காக முதியவரைக் கொண்டு சென்றபோது பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாவட்டத்தின் சாகர் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் காசிராம்(72) எனும் முதியவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கடைசியில் உயிரிழந்ததாக அறிவித்தனர். உயிரிழந்ததாக கூறப்பட்ட காசிராமின் உடலை மறுநாள் பிரேத பரிசோதனை செய்ய ஆய்வுக்கூடத்திற்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு காசிராமின் கால்கள் அசைந்துள்ளன. 

இதனை கண்டு அதிர்ந்த மருத்துவமனை பிரேத பரிசோதனை ஆய்வுக்கூட பணியாளர்கள் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த மருத்துவர்கள் காசிராமை பரிசோதித்து பார்த்து அதிர்ந்தனர்.அப்போது காசிராம் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அந்த அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரோஷன் கூறுகையில், ‘காசிராம் கடந்த 20ம் தேதி இரவு 9.30 மணி அளவில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் உயிரோடு இருப்பது மறுநாள் தெரிய வந்துள்ளது. பணியில் அலட்சியமாக நடந்துக் கொண்ட மருத்துவர்கள் குறித்தும், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரிக்கப்படும்’ என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory