ரஜினி நடித்த கோச்சடையான் இசை வெளியீடு

ரஜினி நடித்த கோச்சடையான் இசை வெளியீடு
பதிவு செய்த நாள் ஞாயிறு 9, மார்ச் 2014
நேரம் 8:04:01 PM (IST)

ரஜினி நடித்து விரைவில் வெளிவர இருக்கும் அனிமேஷன் திரைப்படம் கோச்சடையான். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, படத்தின் திரைக்கதையை கே.எஸ்.ரவிக்குமார் எழுதியிருக்கிறார். ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வின் இயக்கி இருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மராட்டி,போஜ்பூரி, பஞ்சாபி என 6 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குனர் கே.பாலச்சந்தர் மற்றும் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கவிஞர் வைரமுத்து, படத்தின் நாயகி நடிகை தீபிகா படுகோனே, நடிகர் சரத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.



Thoothukudi Business Directory