» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் : கூடுதல் கோட்ட மேலாளர் தகவல்!

ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:56:21 AM (IST)



திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் என மதுரை கூடுதல் கோட்ட மேலாளர் எல். நாகேஷ்வர ராவ் தெரிவித்தார்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை, தெற்கு ரயில்வே, மதுரை கோட்ட மேலாளர் நாகேஷ்வர ராவ் நேற்று ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரை ரயில் நிலையங்களில் நடைமேடைகளை விரிவுபடுத்தும் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. 

அம்ரித் பாரத் திட்டப் பணிகள் 2026 மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். வந்தே பாரத் ரயில் சேவையை திருச்செந்தூர் வரை நீட்டிப்பதற்கு பயணிகள் வைத்த கோரிக்கை பரிசீலனை செய்யப்படும். திருச்செந்தூர்-சென்னை நேர்வழி ரயில் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory