» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றவர் மரண வழக்கு: வேறு விசாரணை அதிகாரி நியமிக்க உத்தரவு!

சனி 19, ஜூலை 2025 9:15:54 PM (IST)

பேய்குளத்தில் போலீஸ் விசாரணை அழைத்துச் சென்றவர் மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி தாக்கல் செய்த இறுதி விசாரணை அறிக்கையை கோவில்பட்டி நீதிமன்றம் ஏற்க மறுத்து வேறு விசாரணை அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தில் கடந்த 20 ஆம் ஆண்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக பேய் குளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவரை அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோர் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இது தொடர்பாக அவருடைய தாயார் வடிவு என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார். அதன்படி வழக்கை விசாரணை எடுத்துக் கொண்ட நீதிமன்றம் சி பி சி ஐ டி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கானது கோவில்பட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்நிலையில் சிபிசிஐடி டிஎஸ்பி அருணாச்சலம், தலைமையிலான போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீசார் மற்றும் தன்னார்வலர்களை விடுவித்து இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஜ, ரகு கணேஷ் ஆகியோரை குற்றவாளியாக சேர்த்து கோவில்பட்டி நீதிமன்றத்தில் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். 

இதற்கு ஆப்சேபனை தெரிவித்து மகேந்திரன் தாயார் வடிவு, வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் மூலம் முறையிட்டார். வழக்கை விசாரித்த கோவில்பட்டி நீதிபதி ஆனந்த், சிபிசிஐடி டிஎஸ்பி, இறுதி கட்ட விசாரணை அறிக்கையை ஏற்க மறுத்ததுடன், அவர் விசாரணையில் முரண்பாடு உள்ளதாக கூறி, வேறு அதிகாரியை நியமித்து மீண்டும் விசாரணை நடத்தி, இறுதி கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் மற்றும் மகேந்திரன் தாயார் வடிவு ஆகியோர் இன்று சாத்தான்குளத்தில் வைத்து கூறுகையில், சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவம் நடந்தபோது, அதே போலீஸ அதிகாரிகள் மகேந்திரனை, கொலை வழக்கில் சம்பந்தமில்லாத மகேந்திரனை அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். போலீசார் தாக்கியதில் சிகிச்சை பெற்ற அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கு கோவில்பட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

அதில் சிபிசிஐடி டி எஸ்பி, தாக்கல் செய்த இறுதி விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்து, மீண்டும் புதிய அதிகாரியை நியமித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்தி இறுதிக்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதனால் நேர்மையான அதிகாரி,யை நியமித்து மகேந்திரன் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர், பேய்குளம் காமராஜர் நல அறக்கட்டளை தலைவர் ஸ்டாலின் மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory