» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாக​னம் பறிக்கப்பட்ட விவகாரம்: டிஎஸ்பி சுந்​தரேசன் பணி​யிடை நீக்​கம் - டிஐஜி பரிந்துரை!

சனி 19, ஜூலை 2025 12:02:24 PM (IST)

காவல் துணைக் கண்​காணிப்​பாளரின் வாக​னம் பறிக்​கப்​பட்​ட​தாக எழுந்த விவ​காரத்​தில், காவல் துறை நடத்தை விதி​களை மீறிய​தாக டிஎஸ்பி சுந்​தரேசனை பணி​யிடை நீக்​கம் செய்​யு​மாறு, மத்திய மண்டல ஐ.ஜி.க்​கு, டிஐஜி பரிந்துரை செய்​துள்​ள​தாகக் கூறப்படு​கிறது.

மயி​லாடு​துறை மாவட்ட மது​விலக்கு அமலாக்​கப் பிரிவு டிஎஸ்​பி​ சுந்​தரேசனின் வாக​னத்தை பறித்​துக் கொண்ட​ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்​டில் இருந்து டிஎஸ்பி அலு​வல​கத்​துக்கு நடந்து சென்ற காட்சிகள் சமூக ஊடகங்​களி​ல் வெளியாகின.

இதற்​கிடை​யில் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்த டிஎஸ்​பி, தான் நேர்​மை​யாகப் பணி​யாற்​றுவ​தால் தொடர்ந்து உயர​தி​காரிகள் நெருக்​கடி தரு​வ​தாக​வும், வளைந்து கொடுத்து போகு​மாறு எஸ்​.பி. கூறிய​தாக​வும் புகார் தெரி​வித்​திருந்​தார். இவரின் புகார்​களுக்கு மாவட்ட எஸ்​.பி. ஸ்டா​லின் மறுப்பு தெரி​வித்​திருந்​தார்.

இச்​சம்​பவத்​துக்கு பாமக தலை​வர் ராம​தாஸ், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் உள்​ளிட்​டோர் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்​. இந்​நிலை​யில், தஞ்சை சரக டிஐஜி ஜியா​வுல் ஹக் நேற்று மயி​லாடு​துறை மாவட்ட எஸ்​.பி. அலு​வல​கத்​தில் கண்​காணிப்​பாளர் ஸ்டா​லின், மது​விலக்கு அமலாக்​கப் பிரிவு காவல் ஆய்​வாளர்​கள் அன்னை அபி​ராமி, ஜெயா உள்​ளிட்ட 10 பேரிடம் விசா​ரணை மேற்​கொண்​டார்.

பின்​னர், உரிய அனு​ம​தி​இன்​றி​ செய்​தி​யாளர்​களுக்கு பேட்டி அளித்​தது, காவல் துறை​யினருக்​கான நடத்தை விதி​களை தொடர்ந்து மீறி​யிருப்​பது உள்​ளிட்ட காரணங்​களுக்​காக அவரை பணி​யிடை நீக்​கம் செய்ய பரிந்​துரை செய்​து, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.க்கு டிஐஜி அறிக்கை அனுப்​பி​யிருப்​ப​தாக காவல் துறை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மத்திய மண்டல ஐ.ஜி. அலு​வலகத்​தில் விசா​ரித்​தபோது, ‘‘டிஐஜி தாக்கல் செய்துள்ள அறிக்​கை, டிஜிபிக்​கும், உள்​துறைச் செயலருக்கும் அனுப்பி வைக்​கப்​படும். டிஎஸ்பி மீதான சஸ்​பெண்ட் குறித்து உள்​துறைச் செயலர் முடி​வெடுப்​பார்’’ என்​றனர்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory