» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாமக்கல்லில் ‘ஷவா்மா’ சாப்பிட்ட 14 வயது மாணவி பலி: 13 பேருக்கு வாந்தி, பேதி!!

திங்கள் 18, செப்டம்பர் 2023 3:46:52 PM (IST)

நாமக்கல்லில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் ‘ஷவா்மா’ சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்தார்.

நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தனியாா் அசைவ உணவகத்தில் சனிக்கிழமை இரவு ஷவா்மா, பிரியாணி உள்ளிட்ட பல்வேறு அசைவ உணவுகளை சாப்பிட்ட பொதுமக்கள் சிலருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

இந்நிலையில் அந்த தனியார் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட நாமக்கல் ஏ எஸ்.பேட்டையைச் சேர்ந்த தவமணி- சரோஜா தம்பதியின் மகள் கலையரசி (14) என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு, வாந்தி, பேதி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது.  இதையடுத்து, கலையரசி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து தூங்கியவர் இன்று காலை உயிரிழந்தார்.  

அதே உணவகத்தில் ஷவா்மா, பிரியாணி உள்ளிட்ட பல்வேறு அசைவ உணவுகளை சாப்பிட்ட நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவிகள் 13 பேருக்கு  வாந்தி, பேதி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் நலம் தேறினா் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அசைவ உணவகத்தில் ஆட்சியா், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான அசைவ உணவுகளைக் கைப்பற்றி அழித்தனா்.நாமக்கல்லைச் சோ்ந்த உணவக உரிமையாளா் நவீன்குமாரிடம் விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத் துறையினா் நோட்டீஸ் அளித்தனா். பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உணவுகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்பிறகு, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory