» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீலிங் செய்தபோது பைக் விபத்து: பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் காயம்!

திங்கள் 18, செப்டம்பர் 2023 10:49:39 AM (IST)



பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் பைக் வீலிங் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்.

பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் 'மஞ்சள் வீரன்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இயக்குனர் செல்அம் இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் டிடிஎப் வாசன் பைக் வீலிங் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர் வீலிங் செய்தபோது பைக் தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அவர் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கை எலும்பு உடைந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு பிளேட் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டி.டி.எஃப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory