» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நெல்லை- திருச்செந்தூர் இடையே ரயில் சேவையில் மாற்றம் : தென்னக ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 9, ஜூன் 2026 8:37:25 PM (IST)
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள யார்டு மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக நெல்லை - திருச்செந்தூர் இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் பகுதியாகவும், முழுமையாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள யார்டு மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, ஜூன் 10-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நெல்லை சந்திப்பு வழியாக இயங்கும் அனைத்து ரயில்களின் போக்குவரத்திலும் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை - திருச்செந்தூர் இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் பகுதியாகவும், முழுமையாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்கள் பகுதி ரத்து மற்றும் வழித்தட மாற்றம்:
வண்டி எண் 56004 / 56003 (திருச்செந்தூர் - நெல்லை - திருச்செந்தூர்):
ஜூன் 12 மற்றும் ஜூன் 14 முதல் 16 வரையிலான 4 நாட்களுக்குத் திருச்செந்தூரில் இருந்து காலை 10:00 மணிக்குக் கிளம்பும் பயணிகள் ரயில் (வண்டி எண் 56004) மற்றும் நெல்லையிலிருந்து மாலை 4:30 மணிக்குக் கிளம்பும் பயணிகள் ரயில் (வண்டி எண் 56003) ஆகியவை நெல்லை சந்திப்பு - செய்துங்கநல்லூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த 4 நாட்களும் இந்த ரயில்கள் செய்துங்கநல்லூர் - திருச்செந்தூர் இடையே மட்டுமே இயக்கப்படும்.
வண்டி எண் 56752 / 56753 (திருச்செந்தூர் - நெல்லை - திருச்செந்தூர்):
ஜூன் 14 முதல் 24 வரை திருச்செந்தூரில் இருந்து காலை 7:05 மணிக்குத் புறப்படும் பயணிகள் ரயில் (வண்டி எண் 56752) செய்துங்கநல்லூர் வரை மட்டுமே இயங்கும். மறுமார்க்கமாக நெல்லையிலிருந்து காலை 9:55 மணிக்குக் கிளம்ப வேண்டிய பயணிகள் ரயில் (வண்டி எண் 56753), நெல்லைக்குப் பதிலாகச் செய்துங்கநல்லூரில் இருந்து காலை 10:14 மணிக்குத் திருச்செந்தூருக்குப் புறப்பட்டுச் செல்லும்.
ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் விபரம்:
வண்டி எண் 56004 / 56003: ஜூன் 17 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை திருச்செந்தூர் - நெல்லை இடையே முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 56755 / 56758: வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 11:30 மணிக்குத் திருச்செந்தூர் செல்லும் ரயில் (வண்டி எண் 56755) மற்றும் திருச்செந்தூரிலிருந்து மாலை 6:15 மணிக்குக் கிளம்பும் ரயில் (வண்டி எண் 56758) ஆகிய இரு ரயில்களும் ஜூன் 22 முதல் 30 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 56751 / 56754: ஜூன் 24-ஆம் தேதி (புதன்கிழமை) நெல்லையிலிருந்து காலை 7:10 மணிக்குத் திருச்செந்தூர் செல்லும் ரயில் (வண்டி எண் 56751) மற்றும் திருச்செந்தூரிலிருந்து மாலை 4:25 மணிக்கு நெல்லை வரும் ரயில் (வண்டி எண் 56754) உள்ளிட்ட பயணிகள் ரயில்கள் அனைத்தும் அன்று ஒருநாள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றங்கள்:
திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16732) ஜூன் மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் பின்வருமாறு பகுதி ரத்து செய்யப்படுகிறது:
ஜூன் 24, 25, 26, 28, 29 (5 நாட்கள்): திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து மதியம் 4:15 மணிக்குத் தனது பயணத்தைத் தொடங்கிப் பாலக்காடு நோக்கிச் செல்லும்.
ஜூன் 27, 30 (2 நாட்கள்): மதுரை - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, மாலை 4:15 மணிக்கு மதுரையிலிருந்து நேரடியாகப் பாலக்காட்டிற்குப் புறப்பட்டுச் செல்லும் எனத் தென்னக ரயில்வேயின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணம் மோசடி: சப்-இன்ஸ்பெக்டர் மீது நாயை ஏவிக் கடிக்க வைத்த கொடூரம் - தம்பதி அதிரடி கைது!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:45:53 PM (IST)

தேங்காப்பட்டணம், குளச்சல் கடற்கரை பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் ஆய்வு!
திங்கள் 8, ஜூன் 2026 8:41:33 PM (IST)

மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் விஜய் அரசு தீர்வு காணும்: அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் உறுதி!
திங்கள் 8, ஜூன் 2026 5:27:22 PM (IST)

குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 4:23:02 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு மையம் தொடக்கம்: ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
சனி 6, ஜூன் 2026 12:30:28 PM (IST)


