» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அண்ணாமலையின் புதிய இயக்கம் ஆட்சியைப் பிடிக்கும் : தூத்துக்குடி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்!

திங்கள் 8, ஜூன் 2026 9:42:38 PM (IST)



தமிழகத்தில் திமுக, தவெக-வுக்கு மாற்றாக அண்ணாமலையின் புதிய இயக்கம் ஆட்சியைப் பிடிக்கும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அண்மையில் விலகிய அண்ணாமலை, "WE THE LEADERS" என்ற புதிய அமைப்பைத் தொடங்கி உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக முன்னாள் துணைத் தலைவர் உமரி சத்தியசீலன் தலைமையில் தூத்துக்குடியில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவிலிருந்து ஒட்டுமொத்தமாகப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் விலகி, அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைவது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த உமரி சத்தியசீலன் கூறியதாவது: "தமிழகத்தில் தற்போது உள்ள ஆளுங்கட்சியான திமுக மற்றும் புதிய வரவான தவெக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றான ஒரு மிகச்சிறந்த மக்கள் சக்தியாக அண்ணாமலையின் புதிய இயக்கம் உருவெடுத்துள்ளது. வரும் காலத்தில் இவ்வியக்கம் தமிழகத்தில் முறைப்படி ஆட்சியைப் பிடிக்கும்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜகவில் உள்ள நிர்வாகிகளில் சுமார் 60% பேர் விரைவில் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைய உள்ளோம். இதற்கான முதற்கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய 15 இடங்களில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன." என்று அவர் தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டத்தில், மாநகர கிழக்கு மண்டல் தலைவர் ராஜேஷ் கனி, தெற்கு மண்டல் தலைவர் மாதவன், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாலபொய் சொல்லான், விந்தியா முருகன், விளையாட்டுப் பிரிவு கண்ணன், துர்க்கையப்பன், கிழக்கு மண்டல செயலாளர் விஜய், இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் பொன் விக்னேஷ், நிர்வாகிகள் சுடலைமுத்து ராஜகோபால், கந்தசாமி, ஹரிஹரசுதன், சிவபெருமாள், சந்தனராஜ், முத்து பெரியநாயகம், கருநாகபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.


மக்கள் கருத்து

MAKKALJun 9, 2026 - 10:15:59 AM | Posted IP 172.7*****

innuma nammalai nambittu irrukkanga

உலக கட்டைJun 9, 2026 - 07:46:23 AM | Posted IP 172.7*****

தூத்துக்குடியில் ஜெயிக்க வாய்ப்பு குறைவு

B.Muthu KrishnanJun 8, 2026 - 11:33:40 PM | Posted IP 162.1*****

👍 suber

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory