» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாநகர் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு: மேயர் தகவல்!
வெள்ளி 14, நவம்பர் 2025 10:40:01 AM (IST)

தூத்துக்குடி மாநகர் முழுவதும் 3000 சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ரோட்டரி கிளப் சங்கத்தின் சார்பில் 48 கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கங்கா பரமேஸ்வரி நகர் பூங்காவில் நடைபெற்ற துவக்கவிழாவிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் ப்ரியங்கா முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் பிண்டோ வில்லவராயர் வரவேற்புரையாற்றினார்.
பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை துவக்கி வைத்து பார்வையிட்ட பின்பு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் செயல்பாடுகளை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா பார்வையிட்டனர். பின்னர் மேயர் கூறுகையில் "மாநகராட்சி பகுதியில் 3000 கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும் மழைக்காலங்களில் எந்தெந்த பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது என்பதையும் கண்காணித்து அதன் அடிப்படையில் உடனடியாக மழை நீர் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அது போல பக்கிள் ஓடை கழிவுநீர் கால்வாய்களில் பொதுமக்கள் குப்பைகளை வீசுவதை கண்காணித்து தடுக்க முடியும். ஆகையால் இனி வரும் காலங்களில் தூத்துக்குடி மாநகரில் எந்த ஒரு நிகழ்வுகள் நடந்தாலும் மாநகராட்சியில் இருந்து மாநகரை கண்காணிக்க முடியும். மாநகரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கேமராக்களுக்கும் இணைப்பு மாநகராட்சி அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
கால சூழ்நிலைக்கு ஏற்ப நாமும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரவேண்டிய நிலையில் இருக்கிறோம் பொதுமக்களும் அதற்கேற்றாற்போல் தாங்களும் மாறி கொள்ள வேண்டும் என்று கூறினார்.நிகழ்ச்சியில் நகர அமைப்பு திட்ட பொறியாளர் ராமலிங்கம், ரோட்டரி கிளப் சங்க செயலாளர் மகாலிங்கம், வட்ட செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர் ஜேஸ்பர், மற்றும் அரசு அலுவலர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:46:01 AM (IST)

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)



muthuNov 14, 2025 - 05:51:39 PM | Posted IP 104.2*****