» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
செக் மோசடி வழக்கு: ஒலிபெருக்கி உரிமையாளருக்கு ஓராண்டு சிறை
வெள்ளி 14, நவம்பர் 2025 7:57:20 AM (IST)
செக் மோசடி வழக்கில் ஒலிபெருக்கி கடை உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் விக்டர் மோகன்ராஜ். இவர், அதே பகுதியில் கண் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவர், நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியில் ஒலிபெருக்கி கடை நடத்தி வரும் செல்வன் என்பவருக்கு பழக்கத்தின் காரணமாக அவர் வீடு வாங்கிய கடனை அடைக்கவும், குடும்பத் தேவைக்காகவும் கடந்த 2019இல் ரூ .2.85 லட்சம் கடனாக வழங்கியுள்ளார்.
கடனை ஒரு மாதத்தில் திருப்பி தருவதாக செல்வன், அதே பகுதியில் உள்ள ஒரு வங்கியின் காசோலையை கொடுத்துள்ளார். விக்டர் மோகன்ராஜ், வங்கியில் காசோலையை செலுத்திய போது, செல்வன் கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்தது. இதனைத் தொடர்ந்து செல்வனிடம் பணத்தை திருப்பிக் கேட்ட போது, காலம் கடத்தியதாக தெரிகிறது.
இதனால் விக்டர் மோகன்ராஜ் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி தேவி ரக்க்ஷா, செக் மோசடியில் ஈடுபட்டதாக செல்வனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், வாங்கிய பணம் ரூ 2.85 லட்சத்தை 2 மாத காலத்திற்குள் கொடுக்காத பட்சத்தில் கூடுதலாக மூன்று மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்தவ ஆலயத்தில் இரு தப்பினர் மோதல்: தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:40:33 PM (IST)

விபத்தில்லா குமரி: லாரி ஓட்டுநர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு
சனி 6, டிசம்பர் 2025 4:59:02 PM (IST)

குமரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள்: ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!
சனி 6, டிசம்பர் 2025 4:11:06 PM (IST)

கன்னியாகுமரி புதிய பேராயராக கிறிஸ்டோபர் விஜயன் தேர்வு: நாளை பதவியேற்பு விழா
சனி 6, டிசம்பர் 2025 3:51:18 PM (IST)

குமரி சுற்றுலாத்தளத்தில் போலி பார்க்கிங் ரசீது தயாரித்து பணம் வசூல் - 2பேர் கைது!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:25:06 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:24:13 PM (IST)


.gif)
கே.கணேசன்.Nov 14, 2025 - 08:12:04 AM | Posted IP 104.2*****