» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியின் பிரதான சாலையில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை: பொதுமக்கள் கோரிக்கை!
புதன் 12, நவம்பர் 2025 10:12:15 AM (IST)

தூத்துக்குடியின் பிரதான சாலையில் விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து போலீசாருக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியின் பிரதான சாலையான தமிழ்ச்சாலையில் மூன்று சிக்னல்கள் உள்ளன. இந்த மூன்று சிக்னல்களில் அவ்வப்போது விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக தூத்துக்குடி மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் வாகனங்கள் இந்த மூன்று சிக்னல்களையும் தாண்டி செல்ல வேண்டி உள்ளது.
தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே உள்ள 4 முக்கு சந்திப்பில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. பழைய பேருந்து நிலையத்தை தாண்டி குரூஸ் பர்னாந்து சிலை அருகே வரும்போது பால விநாயகர் கோவில் தெருவில் இருந்து வாகனங்கள் குறுக்கே செல்வதாலும் மேற்கு நோக்கி ஒரு வழிப்பாதையில் பிரபல ஜவுளி கடை கார் பார்க்கிங் செல்வதற்காக திரும்புவதால் அடிக்கடி இந்த பகுதியில் விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
எனவே தூத்துக்குடி மாநகரப் போக்குவரத்து காவல்துறை மற்றும் மத்திய பாகம் காவல்துறையும் இணைந்து குருஸ் பர்னாந்து சிலை அருகே பேரிகாடுகள் வைத்து, ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் செல்லாமல் தடை செய்து பொதுமக்கள் வாகன போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் செல்வதற்கும், விபத்துகளில் இருந்து மக்களை காப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு மையம் தொடக்கம்: ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
சனி 6, ஜூன் 2026 12:30:28 PM (IST)

மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்: ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:51:36 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)



நான் தான்Nov 13, 2025 - 03:27:03 PM | Posted IP 162.1*****