» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோவில்பட்டியில் காமராஜர் மாஸ்க் அணிந்த மாணவர்களின் ஊர்வலம்

திங்கள் 15, ஜூலை 2024 3:09:20 PM (IST)



கோவில்பட்டியில் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடார் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காமராஜரின் மாஸ்க் அணிந்து ஊர்வலமாக சென்றனர். 

பள்ளி வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் தாமோதரக் கண்ணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி குழு உறுப்பினர் மணிக்கொடி வரவேற்றார். காமராஜர் பிறந்த தின பேரணியை கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் செந்தில்வேல் முருகன்,  சீனிவாசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

நிகழ்ச்சியில் 122 மாணவர்கள் காமராஜரின் மாஸ்க் அணிந்து ஊர்வலமாக சென்று காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மாணவர்களுக்கு பள்ளி சீருடை வழங்கப்பட்டது. 

கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாடார் உறவின்முறை சங்கத் துணைத் தலைவர் செல்வராஜ்,  வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள் ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசினர். இதில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் ராஜேந்திர பிரசாத், அமரேந்திரன்,  செல்வம்,  ரோட்டரி சங்க பொருளாளர் கிருஷ்ணசாமி உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமையாசிரியை செல்வி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

MAKKALJul 15, 2024 - 03:58:14 PM | Posted IP 172.7*****

EXCELLANT STUDENTS.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory