» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இரயில்களில் மூத்த குடிமக்களுக்கு சலுகை : கனிமொழி எம்பியிடம் எம்பவர் இந்தியா கோரிக்கை

ஞாயிறு 14, ஜூலை 2024 2:32:24 PM (IST)



60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இரயில்களில் பயணச் சலுகை கட்டணம் வழங்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா சார்பில் கனிமொழி எம்பியிடம் மனு அளிக்கப்பட்டது. 

எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நடுவத்தின் கௌரவச் செயலாளர் ஆ.சங்கர் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனி மொழியிடம் நேரில் வழங்கிய மனு விவரம்: 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த இரயில்களில் பயணச் சலுகை கட்டணம் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வயதான மூத்த குடிமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆகவே மீண்டும் மூத்த குடிமக்களுக்கு இரயில்களில் பயணச் சலுகை கட்டணம் வழங்க மக்களவையில் இது குறித்து வினா எழுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் மதுரை முதல் பெங்களுர் வரை செல்லவுள்ள வந்தே பாரத் இரயில் சேவையை தூத்துக்குடிக்கு நீட்டிக்க ஆவன செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி முதல் கோயம்புத்தூர் வரை சென்ற இரயில் பயண வசதியை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும். ஏற்கனவே இரயில்வே வாரியத்தால் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி முதல் மேட்டுப்பாளையம், தூத்துக்குடி முதல் பாலருவி, தூத்துக்குடி முதல் பாலக்காடு ஆகிய இரயில் பயண வசதிகளை விரைவில் இயக்குவதற்கு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

K கனகவேல்Jul 19, 2024 - 09:13:38 PM | Posted IP 162.1*****

ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் நிழற் கூரை இல்லாததால் பயணிகள் மழையிலும் வெயிலிலும் அவதி படுகின்றனர் ரயில்வே நிர்வாகம் நிழல் கூரை வசதியை ஏற்பாடு செய்து தர வேண்டுகிறேன்

எந்தJul 16, 2024 - 11:37:45 AM | Posted IP 172.7*****

ஒன்னும் பயனும் இல்லை

Thaika mohmed aultan kayalpatnamJul 15, 2024 - 09:21:27 AM | Posted IP 162.1*****

காயல்பட்டிணம் இரயில் நிலையம் நடைபாதை உயர்த்திட வேண்டி மீண்டும் வேண்டுகிறோம்.

Thanks..Jul 15, 2024 - 09:17:31 AM | Posted IP 162.1*****

நன்றிகள்... நல்வாழ்த்துக்கள்..

PremJul 15, 2024 - 09:04:51 AM | Posted IP 162.1*****

same demand , so long months no improvement. needed action not lip service.

RathinasabapathyJul 15, 2024 - 06:39:08 AM | Posted IP 162.1*****

Waste

இதுJul 14, 2024 - 04:26:51 PM | Posted IP 172.7*****

சுத்த வேஸ்ட். ஈ ஈ ஈ ஈ பல்லை காட்டிட்டு , டாட்டா காட்டிட்டு சொகுசு கார் ல போய்விடுவார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory