» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்: 15ஆம் தேதி தொடக்கம்

சனி 13, ஜூலை 2024 5:12:34 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் வருகிற 15ஆம் தேதி முதல் ஆக.13 வரை மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசின் அரசின் சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் கொண்டு சேர்க்கும் வண்ணம் நடைமுறைப்படுத்தப்படும் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் தொடர்ந்து 15.07.2024 முதல் 13.08.2024 வரை இம்மாவட்டத்தில் உள்ள பிற அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அருகருகே உள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து 20,000 மக்கள் தொகைக்கு ஒரு சிறப்பு முகாம் நடத்துதல் என்ற முறையில் தொடர்ந்து முற்பகல் 09.00 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை நடத்தப்பட உள்ளது. வரும் வாரத்தில் இம்முகாம்கள் கீழ்க்கண்ட கால அட்டவணையின்படி நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித் துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் 44 வகையான சேவைகளை பெறுவதற்கான கோரிக்கை மனுக்களை மேற்குறிப்பிட்ட ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம்.

எனவே தூத்துக்குடி மாவட்ட ஊரகப் பகுதிகளில் மக்களின் இருப்பிடம் தேடி நேரடியாக கோரிக்கைகளைப் பெற்று அவர்களுக்கு தீர்வளிக்கும் வகையில் நடத்தப்படும் ‘மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாம்களில் பொது மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

C.PatturajJul 14, 2024 - 09:04:49 AM | Posted IP 162.1*****

When did they conduct on Ottapidaram taluk ???

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory