» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி பகவதி அம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு தரிசனம்

வெள்ளி 27, ஜனவரி 2023 4:21:30 PM (IST)கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார். 

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் யோகி பாபு கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி, ஸ்ரீ தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார். நடிகர் யோகிபாபுவை கண்ட ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory