» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருவட்டார் சந்தையில் ரூ.15லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணிகள் துவக்கம்!

செவ்வாய் 6, டிசம்பர் 2022 4:55:33 PM (IST)திருவட்டார் சந்தையில் ரூ.15 இலட்சம் மதிப்பில் மேற்கூரை அமைப்பதற்கான பணியினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் பேரூராட்சிக்குட்பட்ட திருவட்டார் சந்தையில் மேற்கூரை அமைப்பதற்கான பணியினை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்   இன்று (06.12.2022) துவக்கி வைத்து, தெரிவிக்கையில தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சாலையின் தரத்தை மேம்படுத்துதல், சீரமைத்தல், சந்தைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை முனைப்புடன் செயலாற்றி வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, திருவட்டார் சந்தையில் மேற்கூரை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கை வைத்தார்கள். இக்கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றதன் அடிப்படையில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்றையதினம் திருவட்டார் சந்தையில் மேற்கூரை அமைப்பதற்கான பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்றார். 

இந்நிகழ்ச்சியில் திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ், செயல் அலுவலர் மகாராஜன், கண்ணனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ஜாண்பிரைட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory