» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி: ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் அறிவிப்பு

செவ்வாய் 19, ஏப்ரல் 2022 5:54:11 PM (IST)

தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில் - பெங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயில் பெங்களூர் அருகே உள்ள கார்மேலரம் என்ற ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

அதன்படி பெங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயில் (17235) மற்றும் நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் (17236) ஆகியவை கார்மேலரம் ரயில் நிலையத்திற்கு முறையே மாலை 05.39 மற்றும் காலை 07.29 மணிக்கு வந்து சேர்ந்து மாலை 05.40 மற்றும் காலை 07.30 மணிக்கு புறப்படும். இந்த புதிய வசதியை ஏப்ரல் 15 முதல் அக்டோபர் 14 வரை ஆறு மாதத்திற்கு பரிசோதனை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்ட பயணிகள், போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பெங்களூர் சென்று சுற்றிவர வேண்டியதில்லை.

திருநெல்வேலி - நாகர்கோவில் பிரிவில் வள்ளியூர் - ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலைகள் நடைபெற இருக்கின்றன.  எனவே இந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  அதன்படி

1) திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் (22627/22628) ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 29 வரை திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

2) ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 28 வரை தாம்பரத்திலிருந்து இரவு 11.00 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (20691) திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 29 வரை நாகர்கோவிலில் இருந்து மாலை 03.50 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) நாகர்கோவில் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

3) ஏப்ரல் 24 அன்று புதுச்சேரியிலிருந்து மதியம் 12.00 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில் (16861) மற்றும் ஏப்ரல் 25 அன்று கன்னியாகுமரியிலிந்து மதியம் 01.50 மணிக்கு புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரயில் (16862) ஆகியவை திருநெல்வேலி - கன்னியாகுமரி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

4) ஏப்ரல் 28 அன்று சென்னையில் இருந்து மாலை 06.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12667) மற்றும் ஏப்ரல் 29 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திர விரைவு ரயில் ஆகியவை திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

5) ஏப்ரல் 29 அன்று கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (12634) கன்னியாகுமரியில் இருந்து 45 நிமிடங்கள் காலதாமதமாக மாலை 05.50 மணிக்கு புறப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory