» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நான் அதிபரானால் 75% அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன்: விவேக் ராமசாமி பேட்டி

சனி 16, செப்டம்பர் 2023 5:18:13 PM (IST)

நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 75 சதவீதத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி  கூறினார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்குவதற்கான பல முனை போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியும் உள்ளார். அவர் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்குகுடியரசு கட்சியினரின் ஆதரவை பெற தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த விவேக் ராமசாமி, தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசின் செலவீனங்களை குறைக்கும் வகையில் பல்வேறு அரசு நிறுவனங்களை மூடுவதோடு, 75 சதவீதத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன் என்றும் கூறினார்.

எப்.பி.ஐ. என்று அழைக்கப்படும் மத்திய புலனாய் அமைப்பு, கல்வித்துறை, மது, புகையிலை, துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பணியகம், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களை மூடும் திட்டம் உள்ளதாகவும், 4 ஆண்டு பதவி காலத்துக்குள் 22 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் அரசு பணியாளர்களின் எண்ணிக்கையில் 75 சதவீதத்தை குறைப்பதே தனது இறுதி இலக்காக இருக்கும் என்றும் விவேக் ராமசாமி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory