» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லியில் சுதா எம்.பியிடம் நகை பறிப்பு: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 4:12:58 PM (IST)

தலைநகர் டெல்லியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காங்கிரஸ் எம்.பி சுதா கூறினார்.
டெல்லியில் நடைபயிற்சி சென்ற போது காங்கிரஸ் எம்.பி சுதாவிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அமித்ஷாவுக்கு சுதா எம்.பி கடிதம் எழுதியுள்ள நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: டெல்லியில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக இருக்கக்கூடிய தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் காலை நடை பயிற்சி மேற்கொண்ட போது மர்ம நபர் ஒருவர் வாகனத்தில் வந்து, என்னிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு சர்வ சாதாரணமாக எந்த பதட்டமும் இல்லாமல் சென்றார்
இந்த சம்பவம் நடைபெற்ற போது அந்த பகுதியில் ஒரு போலீசார் கூட பாதுகாப்பு பணியில் ரோந்து பணியிலோ இல்லை சற்று நேரத்திற்கு பின்பாக அந்த பகுதியில் இருந்து பணியில் வந்த போலீசாரிடம் செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக தெரிவித்தோம் ஆனால் தங்களுடைய நீங்கள் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என்று மட்டுமே தெரிவித்தனர்
இந்த சம்பவத்தால் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது இவ்வளவு பாதுகாப்பான தூதரகங்கள் அமைந்திருக்கக் கூடிய பகுதியில் இதுபோன்ற ஒரு செயின் பறிப்பு சம்பவம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு நடைபெற்றிருக்கிறது என்றால் இந்த நாட்டில் பிற பெண்கள் இதுபோன்று செல்லும்போது அவர்களுக்கு எதிரான கொடுமை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
காவல்துறையினரும் அலட்சிய போக்கு உடனே நடந்து கொண்டனர் என்பது வேதனைக்குரியது. இந்த சம்பவம் தொடர்பாக மக்களை சபாநாயகர் இடம் புகார் அளித்துள்ளோம். மேலும் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்புவோம். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தலைநகர் டெல்லியில் இரட்டை இன்ஜின் அரசாங்கம் இருந்த போதும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து கொண்டிருக்கின்றது" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெங்களூரு விமான நிலையத்தில் கொரிய பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: ஊழியர் கைது!
வியாழன் 22, ஜனவரி 2026 5:11:36 PM (IST)

ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து: 10 வீரர்கள் பலி!
வியாழன் 22, ஜனவரி 2026 3:45:41 PM (IST)

கேரள நபர் தற்கொலை: பாலியல் தொல்லை வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது!
புதன் 21, ஜனவரி 2026 4:50:10 PM (IST)

மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை மாநில காவல்துறை விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம்
புதன் 21, ஜனவரி 2026 4:03:21 PM (IST)

பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:31:57 PM (IST)

கோவையில் ஏழுமலையான் கோயில் பணிகள் விரைவில் துவங்கும் : தேவஸ்தான அதிகாரி தகவல்
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:29:04 PM (IST)

