» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இடஒதுக்கீட்டில் மோசடி செய்து பணியில் சேர்ந்த உதவி கலெக்டர் பூஜா கேத்கர் பணி நீக்கம்!
ஞாயிறு 8, செப்டம்பர் 2024 11:25:13 AM (IST)
இடஒதுக்கீட்டில் மோசடி செய்து ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்த மராட்டிய உதவி கலெக்டர் பூஜா கேத்கரை மத்திய அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து வாசிம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பூஜா கேத்கர் சிவில் சர்வீஸ் தேர்வில், மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசின் கூடுதல் செயலாளர் மனோஜ்குமார் திவேதி தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. விசாரணையில் பூஜா கேத்கர் தனது பெயர், தந்தை பெயர், தாய் பெயர், புகைப்படம், கையெழுத்து, இ-மெயில் ஐ.டி., செல்போன் எண், முகவரி ஆகியவற்றை மாற்றி அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அவர் மீது போலீசில் மோசடி வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணை நடந்து வந்த சமயத்தில் கடந்த ஜூலை 31-ந்தேதி பூஜா கேத்கரின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சியை, யு.பி.எஸ்.சி. ரத்து செய்து அறிவித்தது. வருங்காலத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதவும் நிரந்தர தடை விதித்தது.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை, டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தன் மீதான குற்றச்சாட்டை களைய, எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சுய மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கை தருவதாக கூறினார். பின்னர் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே யு.பி.எஸ்.சி. நடவடிக்கை எடுத்து ஒரு மாதம் கடந்த நிலையில், மத்திய அரசு நேற்று பூஜா கேத்கரை ஐ.ஏ.எஸ். பதவியில் இருந்து பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து பிரதமர் மோடி: காங்கிரஸ் எம்.பி சசி தரூர் புகழாரம்..!
திங்கள் 23, ஜூன் 2025 5:03:00 PM (IST)

கார் டயரில் சிக்கி தொண்டர் பலி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்கு பதிவு!
திங்கள் 23, ஜூன் 2025 12:21:25 PM (IST)

ஆமதாபாத் விமான விபத்தில் விதிமீறல் கண்டுபிடிப்பு: ஏா் இந்தியா அதிகாரிகள் 3 பேர் பணிநீக்கம்!
ஞாயிறு 22, ஜூன் 2025 11:47:26 AM (IST)

யோகா, உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது: பிரதமர் மோடி பேச்சு
சனி 21, ஜூன் 2025 10:17:28 AM (IST)

கச்சா எண்ணெய் விலை குறித்து தேவையற்ற கவலை வேண்டாம்: பெட்ரோலியத்துறை அமைச்சர்
வெள்ளி 20, ஜூன் 2025 12:06:15 PM (IST)

ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் சூழல் விரைவில் உருவாகும்: அமித்ஷா பேச்சு
வெள்ளி 20, ஜூன் 2025 10:24:48 AM (IST)
