» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்!

திங்கள் 18, செப்டம்பர் 2023 11:46:40 AM (IST)

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்து மதக்கடவுள் விநாயகரின் பிறந்த நாள் விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (செப்.18) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாகவும், வினை தீர்க்கும் தெய்வமாகவும் விநாயகர் திகழ்கிறார். விநாயகர் பிறந்த தினமான இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி நாடு முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் விநாயகர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை வழிபட்டு செல்கின்றனர். அதேபோல், வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடும் நடத்தப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory