» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தமிழக தலைமைச் செயலாளர் அதிரடி மாற்றம்: புதிய தலைமைச் செயலாளர் நியமனம்
புதன் 8, ஏப்ரல் 2026 4:21:36 PM (IST)

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தமிழகத் தலைமைச் செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. ஆகியோரை மாற்றி இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத் தலைமைச் செயலாளராக இருந்த திரு. முருகானந்தம், ஐ.ஏ.எஸ். அவர்கள் விடுவிக்கப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக திரு. சாய்குமார், ஐ.ஏ.எஸ். அவர்களை நியமித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திரு. சாய்குமார் அவர்கள் தற்போது தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் (TNPL) தலைவராகப் பணியாற்றி வருகிறார். இவர் முன்னதாக முன்னாள் முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைச் செயலாளர் மட்டுமல்லாது, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஆயுதப்படை டி.ஜி.பி.யும் மாற்றப்பட்டுள்ளார். புதிய டி.ஜி.பி.யாக திரு. சந்தீப் மிட்டல், ஐ.பி.எஸ். அவர்களை நியமித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அதிரடி உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், புதிய அதிகாரிகள் பணியில் இணைந்தது தொடர்பான அறிக்கையை இன்று மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன்பாக அரசு அதிகாரிகளை மாற்றுவது வழக்கமான நடைமுறை என்றாலும், தேர்தல் நடைபெற மிகக் குறுகிய காலமே உள்ள நிலையில், மாநிலத்தின் மிக உயரிய பதவியான தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை மறுசீரமைப்புக்குக் கால அவகாசம் தேவை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
வியாழன் 14, மே 2026 4:36:44 PM (IST)

குதிரை பேரப் புகார்: தவெக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
புதன் 13, மே 2026 4:21:55 PM (IST)

தமிழகத்தில் அமையவுள்ள புதிய ஆட்சிக்கு வாழ்த்து: எடப்பாடி பழனிசாமி திடீர் சிக்னல்!
சனி 9, மே 2026 3:44:29 PM (IST)

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி: விஜய்க்கு ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 11:43:27 AM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: கட்சி மாறிப் போட்டியிட்டு வென்ற முக்கியப் புள்ளிகள்!
செவ்வாய் 5, மே 2026 10:24:08 AM (IST)

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் கவனம் : முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:53:56 PM (IST)


