» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து: மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு

திங்கள் 1, நவம்பர் 2021 4:49:37 PM (IST)

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்தான நிலையில் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்தநிலையில்,  வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து குறித்த மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு  செய்துள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். முன்னதாக வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து என்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது  எனவும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என  பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory