» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

வியாழன் 17, அக்டோபர் 2019 3:25:57 PM (IST)

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கலான மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை இளையான்குடியைச் சேர்ந்த லட்சுமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், மாநகராட்சி, மாவட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு 10 ஆண்டுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2 உள்ளாட்சித் தேர்தலில் தாயமங்கலம் மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டுகள் ஆதிதிராவிட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் சுழற்சி முறையில் 2 வார்டுகளும் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த தேர்தலிலும் 2 வார்டுகளும் ஆதிதிராவிட பிரிவினருக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஊராட்சிகளில் வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. எனவே தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து, சுழற்சி முறையை முறையாக பின்பற்றி வார்டு இடஒதுக்கீடு அறிவிக்க உத்தரவிட வேண்டும்  என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ஆர். தாரணி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory