» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் போட்டியிட்ட வைகோ உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வு!

வியாழன் 11, ஜூலை 2019 4:06:55 PM (IST)

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட ஆறு பேரும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவின் சார்பில் போட்டியிட்ட முகம்மது ஜான், சந்திரசேகர், பாமகவின் அன்புமணி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். திமுகவின் சார்பில் போட்டியிட்ட  தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற வைகோ, வில்சன், சண்முகம் ஆகியோர் தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ளனர். வெற்றிச் சான்றிதழை, தேர்தல் நடத்தும் அலுவலரும், சட்டப்பேரவைச் செயலாளருமான சீனிவாசனிடம் இருந்து வெற்றியாளர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.


மக்கள் கருத்து

சாந்தன்Jul 17, 2019 - 09:13:14 PM | Posted IP 162.1*****

இறையான்மைமீது நம்பிக்கை இல்லை - ஆனால் உறுதிமொழி மட்டும் ஏற்பேன் ----

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory